என்ன சோதனை இது
எங்கள் நாட்டுக்கா சோதனை?
எம் நாட்டு மக்கள் எத்தனை வழிகளை சுமந்தார்கள்
ஏத்தனை உயிர்களை கொடுத்தார்கள்.
எல்லாமே வீண்தானா?
இல்லை கல்லறைகளுக்குள் தமிழனின் கனவுகள் கருக்கொண்டு கிடக்கின்றன!
சிந்திய குருதியின் சூடு தணியாமல் கிடக்கின்றது.
மனங்களில் மாறாத வடுக்கள் கிடக்கிறது.
நாம் செய்த வேள்வி தியாக வேள்விதான் முடிவதுக்கு மாதங்கள் ஆகலாம் வருடங்களும் ஆகலாம்
ஆனால் தமிழன் செய்த வேள்வி என்றும்
வீனாவதில்லை அதை சரித்திரம் சொல்கிறது.
இது ஆடி மாதம் கண்ட கனவுகள் பலிக்கும் மாதம்
கல்லறைகள் பூ பூக்கும் மாதம்
களமாடி வெல்லும் காலம்.
கட்டுகதைகளையும் கற்பனைகளையும் எண்ணி
காலம் கழிக்காதே.
யாழ்ப்பாணம் என்ன கொழும்பையும் சேர்த்து பிடிப்போம்.
புலியின் குணம் அறிந்தவனுக்கு புதிர் புரியும்.
நீ ரோஜாப்பூ எடுத்து வா கல்லறைகளுக்குள் துயிலும் மாவீரர்களின் காலடியில் வைத்து போ.
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்
இவர் இன்னும் வாழ நாம் செய்வோம் தியாகம்.
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த மாவீரர்களே
உங்கள் உயிர் விலைக்கு இங்கு எது ஈடாகும்?
நீ ரோஜாப்பூ எடுத்துவா கல்லறைகளுக்குள் துயிலும் மாவீரர்களின் காலடியில் வைத்துபோ.
தமிழினம் விடியட்டும்.
பொ.வசந்த்